அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பயணிகள் சேர்ந்து ரயில் ஒன்றை அசைத்து சிக்கிக்கொண்ட பயணி ஒருவரைக் காப்பாற்றிய சம்பவம் உலகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் அமைந்துள்ள ரயில் நிலையத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரயிலில் இருந்து இறங்கும் பயணி ஒருவரின் கால் ரயில் மற்றும் ரயில்மேடைக்கும் இடையில் உள்ள சிறிய இடைவெளியில் சிக்கிக்கொண்டது.
15 சென்டி மீட்டர் அளவுள்ள சிறு இடைவெளியிலே சிக்கியதால், அவரால் காலை வெளியில் எடுக்க முடியாமல்போக, அங்கிருந்த பயணிகள் உடனடியாக, ஒற்றுமையாக செயற்பட்டு ரயிலை அசைத்து அவரை காப்பாற்றியுள்ளனர்.
10,000 தொன் நிறையுடைய ரயிலை இத்தனை பேர் சேர்ந்து அசைத்தமை தனக்கு ஆச்சரியமளிப்பதாக ரயில் நிலைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒற்றுமையே பலம் என்று சும்மாவா சொன்னார்கள்!!!!