அமெரிக்காவின் பபல்லோ நகரைச் சேர்ந்த பெலிமினா ரோட்டுண்டோ என்ற 100 வயது மூதாட்டி, வாரத்துக்கு ஆறு நாட்கள் இப்பகுதியிலுள்ள ஒரு சலவை நிலையத்தில் சுறுசுறுப்புடன் வேலை செய்து வருகிறார்.
ஒவ்வொரு நாளும் பதினோறு மணிநேரம் உழைக்கும் பெலிமினா காலையில் எழுந்து, வெளியில் வந்து மக்களிடம் பேசுவது ஒரு நல்ல மாற்றத்தைக் கொடுக்கின்றது. ஆகவே, இந்தப் பணியை விட்டு ஓய்வெடுக்கவே விரும்பவில்லை என்கிறார்.
மேலும், பலர் வெகு விரைவாகவே பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். ஓய்வுபெறும் வயது குறைந்தபட்சம் எழுபத்தைந்தாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘நான் நடக்கவே முடியாமல் போனால் மட்டுமே வேலையை விடுவேன்’ என்கிறார் நம்பிக்கையான பெலிமினா பாட்டி.