100 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளை இந்த மாதம் மீண்டும் ஆரம்பிக்க கல்வி அமைச்சு பரிசீலித்து வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில் 100இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 3 ஆயிரம் பாடசாலைகள் உள்ளன.