100 சதங்களை விளாசி புதிய மைல்கல்லை எட்டினார் குமார் சங்கக்கார!

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பல வெற்றிகளை தேடிதந்த அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, முதல் தர மற்றும் ஏ தர போட்டிகளில் 100 சதங்களை விளாசி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற குமார் சங்கக்கார, தற்போது முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலும், வெளிநாட்டு ரி-ருவென்ரி தொடர்களிலும் விளையாடிவருகிறார்.

இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் முன்னணி முதல்தர கிரிக்கெட் தொடரில் சரே அணிக்கான விளையாடிவரும் சங்கக்கார, யார்க்ஷயர் அணிக்கெதிரான போட்டியில் 121 பந்துகளில் 9 பவுண்டரி 4 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 121 ஓட்டங்கள் விளாசி, 100ஆவது சதமடித்தார்.

இந்த சதமானது கிரிக்கட் வரலாற்றில் 100 சதங்கள் அடிக்கும் 37ஆவது வீரர் என்ற பெருமையை சங்காவிற்கு பெற்றுக்கொடுத்துள்ளது.

இரண்டாவது காலிறுதி போட்டியாக நடைபெற்ற இப் போட்டியில் சரே அணி 24 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக குமார் சங்கக்கார தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts