100வது நாளை எட்டிய போர் ! களமிறங்கியது ரஷ்யாவின் சிறப்பு அணுஆயுதப்படை!!

ரஷ்யாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவானோவோ மாகாணத்தில் ரஷ்யாவின் சிறப்பு அணுஆயுதப் படைகள் தீவிர போர் பயிற்சில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போர் நடவடிக்கைகள் 100வது நாளை தொட்டு இருக்கும் நிலையில், உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன.

ரஷ்யாவின் இந்த தீவிர தாக்குதல் வேகத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் உதவவேண்டும் என்ற உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், 700 மில்லியன் டொலர் மதிப்புள்ள ராக்கெட் ஏவுகணை மற்றும் வெடிமருந்துகள் அடங்கிய பாதுகாப்பு உதவி தொகுப்பை அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், ரஷ்யாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள இவானோவோ மாகாணத்தில் ரஷ்ய இராணுவத்தின் அணுஆயுத சிறப்பு படைப்பிரிவு தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts