10 வருடத்தை நிறைவு செய்துள்ள ஆசிரியர்களுக்கு உடனடி இடமாற்றம்

ஒரே அரச பாடசாலையில் 10 வருடங்கள் சேவைக் காலத்தை நிறைவு செய்துள்ள சகல ஆசிரியர்களும், அதிபர்களும் இன்னும் இரு மாதங்களுக்குள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒரே பாடசாலையில் பல வருடங்கள் சேவையாற்றும் ஆசிரியர்களினால் பாடசாலை நிருவாகத்தைக் கொண்டு செல்ல பல்வேறு தடைகள் காணப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

கல்விச் செயற்பாடுகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் மேற்படி நடவடிக்கைகள் உதவி புரியும்” என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related Posts