தற்போது மழை வீழ்ச்சி குறைவடைந்திருந்தாலும் வாராந்தம் 10 இற்கும் மேற்பட்டோர் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்படுகின்றனர். எனவே டெங்கு பற்றி விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் இதுவரை 76 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தில் மாத்திரம் 153 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 620 பேர் டெங்கினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பலர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். தற்போது மழைவீழ்ச்சி குறைவாக இருக்கின்ற போதும், டெங்கு நோய் பரவுகின்றமை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
எனவே சுற்றாடலைச் சுத்தமாக வைத்திருந்து டெங்கிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.