இன்று ஏப்ரல் 06 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலான வாராந்த வேலைக்கால வாரம் அரச தனியார் ஆகிய இரண்டுபிரிவினருக்கும் வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
கடந்த வாரமும் வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 02.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும். இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும்.
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.