யாழ். மாநகர சபையால் அண்மையில் புனரமைக்கப்பட்ட யாழ் மணிக்கூட்டுக் கோபுரம் 19 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் செயலிழந்துள்ளது.
பத்து இலட்சம் ரூபா பெறுமதியில் மாநகர சபையினால் திருத்தப்பட்ட கோபுரத்தின் மணிக்கூடுகள் நேற்றிலிருந்து அதன் செயற்பாடுகளும் முற்றாக செயழிலந்துள்ளது
கடந்த மாதம் 16 ஆம் திகதி புனரமைக்கப்பட்ட யாழ் மணிக்கூட்டுக் கோபுரம் யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் மற்றும் வடமாகான ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.