2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு!!

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் நவம்பர் 25 ஆரம்பமாகி டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறும்.

குறித்த பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் கால அட்டவணைகள் அந்ததந்த பாடசாலை அதிகர்களுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள், கால அட்டவணைகள் தபால் மூலம் அவர்களது தனிப்பட்ட முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

தபால் மூலம் அனுமதி அட்டைகளைப் பெறாத தனியார் விண்ணப்பதாரர்கள், நவம்பர் 18 ஆம் திகதி முதல் https://www.doenets.lk/ என்ற பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

அனுமதி அட்டைகளில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால், அனைத்து விண்ணப்பதாரர்களும் நவம்பர் 18 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக https://onlineexams.gov.lk/eic/index.php/clogin/ என்ற இணையதளத்தின் மூலமாக மேற்கொள்ளலாம்.

Related Posts