ட்ரோன் புகைப்படக் கருவியை பயன்படுத்தும் போது, கடைபிடிக்கப்பட வேண்டிய ஒழுக்க விழுமியங்கள் மற்றும் சட்ட விதிமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்கான செயலமர்வை அரச தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த செயலமர்வு அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில், எதிர்வரும் 31ஆம் திகதி,முழுநேர செயலமர்வாக நடைபெறும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊடக வர்த்தகம் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் இயக்கப்பட்டு வரும் ட்ரோன் புகைப்படக் கருவிகள் மூலம், காணொளிக் காட்சிகளை பெற்றுக்கொள்ளும் தொழில்நுட்பம், வேகமாக விரிவடைந்து வருகின்றது.
மேலும், செய்தி சேகரிப்புக்காகவும், ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக வலைப்பின்னல் மூலமாகவும் இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இதனால் விமான சேவைகள் அதிகார சபையின் ஒத்துழைப்புடன் புகைப்படக்கருவியை பயன்படுத்துவதற்கான ஒழுக்கவிழுமியங்கள் மற்றும் சட்டவிதிகள் குறித்து, ஊடகவியலாளர்கள் மற்றும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களுக்கான செயலமர்வுக்கு அரச தகவல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தப் பயிற்சி செயலமர்வில் கலந்து கொள்வதற்காக www.news.lk மற்றும் www.dgi.gov.lk என்ற இணையத் தளங்களினூடாக பதிவுசெய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.