மீன்பிடி தொழிலுக்கு விண்ணப்பம் கோரல்

தென்கொரியாவில், கடற்றொழில் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்வதற்காக, இலங்கை பிரஜைகளிடம் நடத்தப்படும் மொழி தேர்ச்சிப் பரீட்சைகான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இந்த விண்ணப்பங்கள், தங்கல்ல, காலி, மாத்தறை ,சீதுவை மற்றும் திருகோணமலை ஆகிய பயிற்சி 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விநியோகிக்கப்படும்.

கடற்றொழில்துறையில் தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைபட்டவர்கள், இந்த மொழி தேர்ச்சிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் இந்த பரீட்சைதொடர்பான மேலதிக விவரங்களை www.slbfe.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் பணியகம் அறிவித்துள்ளது.

Related Posts