மருந்து பொருட்களின் விலைகுறைப்பு வெள்ளிக்கிழமை அமுலாகும்

மருந்து பொருட்களின் விலை குறைப்பு, வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி, அத்தியாவசியமான 48 வகையான மருந்துப்பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் அதிகமாக காணப்படும் நோய்களுக்கான மருந்துகளும் இதில் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், வலிப்பு, ஆஸ்துமா, மன நோய் மற்றும் வலி நிவாரணி மருந்துகள் என்பன அடங்குவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related Posts