இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ,தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோர் தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் ஒரு பகுதியினர் ஆதரவினை தெரிவித்துள்ளனர். அதேவேளை ஜேவிபி எதிர்க்கட்சியாகவே செயற்படும் என கூறியுள்ளது.இருப்பினும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு அமைச்சரவையில் பங்கேற்காது என்றும் அறிவித்துள்ளது .