செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஜோடிகள் சந்திப்பதற்கு தடை

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு வருகின்ற காதல் ஜோடிகள், ஆலய வளாகத்தில் உலாவித் திரிவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆலய நிர்வாக சபையால், இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் கூறப்பட்டுள்ளதாவது, ஆலயத்துக்கு வரும், காதல் ஜோடிகள் தரிசனம் செய்த பின்னர், திரும்பிச் செல்ல வேண்டும். அதனை விடுத்து ஆலய வளாகங்களில் அமர்ந்து பொழுதைப் போக்கக்கூடாது.

புனிதமான இந்தப் பிரதேசத்தில் பொழுதைப் போக்குவதைத் தவிர்க்கவேண்டும். இதனை மீறிச் செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அதுமட்டுமன்றில் அவ்வாறு வருகைதருக்கின்றவர்களின் வாகனங்களும் பறிமுதல்செய்யப்படும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts