கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரில் எண்ணெய் மற்றும் கிரீஸ் கலக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.
நுகர்வோர் அதிகாரசபையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கொழும்பு நகரின் சில கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 37 குடிநீர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகாரசபை மேலும் அறிவித்துள்ளது.
அவ்வாறு கைப்பற்றப்பட்ட குடிநீரில் எண்ணெய் மற்றும் கிரீஸ் கலக்கப்பட்டிருப்பதை அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.