யாழிலிருந்து கதிர்காமம் செல்ல விசேட பஸ் சேவை

கதிர்காமம் ஆலயததுக்குச் செல்ல, இலங்கை போக்குவரத்துச் சபையினால், விசேட பஸ் சேவை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என யாழ். சாலை முகாமையாளர் எஸ்.குலபாலசெல்வம் தெவித்தார்.

கதிர்காமக் கந்தன் தீர்த்தத் திருவிழாவை முன்னிட்டு, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 18, 19, 20ஆம் திகதிகளில், யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இருந்து, கதிர்காமம் நோக்கிப் பயணிகளின் வருகைக்கு ஏற்ப விசேட பஸ் சேவைகள் இடம்பெறும்.

ஆலயத்துக்குச் செல்லும் அடியவர்கள், யாழ். சாலை – 0212222207, 0771058150, பருத்தித்துறை சாலை – 0212263266, 0771058130, காரைநகர் சாலை – 0213207593, 0771058120, கிளிநொச்சி சாலை – 0212283737, 0771058170, மன்னார் சாலை – 0232222281, 0771058140, வவுனியா சாலை 0242223449, 0771058160 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு, மேலதிக தகவல்களை அறிய முடியும் என அவர் தெரிவித்தார்.

Related Posts