‪யாழ்ப்பாணம் – கிளிநொச்சி இடையே குறுந்தூர ரயில் சேவை!

யாழ்ப்பாணம் – கிளிநொச்சிக்கிடையே குறுந்தூர ரயில் சேவை ஒன்று இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

train

இதன்படி இன்று காலை 6.05 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட ரயில் கிளிநொச்சியிலிருந்து மீண்டும் 8.05 மணிக்கு புறப்பட்டது. இதேபோன்று மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் ரயில் மீண்டும் 5.55 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து புறப்படும்.

இந்த சேவை இன்றிலிருந்து கிரமமாக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேவையில் பயணக்கட்டணமாக 90 ரூபா அறவிடப்படும் என்றும், இந்த ரயில் யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்குமிடையிலான அனைத்து தரிப்பிடங்களிலும் தரித்து செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts