ஹொக்கி மத்தியஸ்தர்களின் தரத்தை உயர்த்த பயிற்சிப் பட்டறை

sportsnews-logoயாழ் மாவட்ட ஹொக்கிச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவடட் ஹொக்கி மத்தியஸ்தர்களின் தரத்தை உயர்த்தும் வகையிலும் விளையாடடு வீர வீராங்கனைகளை மேம்பாடையச்செய்யும் வகையிலும் எதிர்வரும் 13ஆம் திகதி சனிக்கிழமை பகல் 9.00 மணிக்கு பயிற்சிப்பட்றையும் கருத்தரங்கும் கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இந்த பயிற்சிப்பட்றையையும் கருத்தரங்கையும் யாழ்ப்பாணம் பல் கலைக்கழகத்தின் உடற்கல்வித்துறை விரிவுரையாளர் ஜீ.டானியல் மதியழகன் நடத்தவுள்ளார்.

இந்த கருத்தரங்கிலும் பயிற்சிப்பட்டறையிலும் யாழ் மாவட்ட அனைத்து ஹொக்கி மத்தியஸ்தர்களையும் ஹொக்கி விளையாட்டு வீர வீராங்கனைகளையும் கலந்துகொள்ளும் படி யாழ் மாவட்ட ஹொக்கிச் சங்கம் அறிவித்துள்ளது.

Related Posts