ஹைலன்ட் பால் மாவின் விலைகளும் அதிகரிப்பு

பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய உற்பத்தியான ஹைலன்ட் பால் மாவின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக MILCO தனியார் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 400 கிராம் ஹைலன்ட் பால் மாவின் விலை 90 ரூபாவினாலும், ஒரு கிலோ கிராம் ஹைலன்ட் பால் மாவின் விலை 225 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 400 கிராம் ஹைலன்ட் பால் மாவின் புதிய விலை 470 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் ஹைலன்ட் பால் மாவின் புதிய விலை 1170 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Posts