ஹைலன்ட் பால்மா, யோகட் விலைகள் குறைப்பு

ஹைலன்ட் பால்மா மற்றும் யோகட் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று கால்நடை மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எச்.எல். திசேரா தெரிவித்தார்.

அதன்பிரகாரம் 400 கிராம் நிறைகொண்ட ஹைலன்ட் பால்மா பக்கற் 40 ரூபாவினாலும் ஒரு கிலோ கிராம் பக்கற் 100 ரூபாவினாலும் யோகட் 3 ரூபாவினாலும் குறைக்கப்படும்.

அதனடிப்படையில் 400 கிராம் ஹைலன்ட் பால் மா பக்கற்றின் விலை 285 ரூபாவாகும். ஒரு கிலோ கிராம் பக்கற் 675 ரூபாவாகும். யோகட் ஒன்றின் விலை 27 ரூபாவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விலை குறைப்பு, நேற்று திங்கட்கிழமை (27) உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts