ஹேரத் அபாரம் ; சிம்பாப்வே அணியை வீழ்த்தியது இலங்கை

சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத்தின் அபார பந்துவீச்சின் காரணமாக இலங்கை அணி 257 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

254778

491 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 233 ஓட்டங்களுக்கு சகலவிக்கட்டுகளையும் இழந்து டெஸ்ட் தொடரை கைநழுவவிட்டது.

சிம்பாப்வே அணி சார்பில் எர்வின் 72 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 8 விக்கட்டுகளை கைப்பற்றியதுடன், போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை தொடர் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் திமுத் கருணாரத்ன தெரிவுசெய்யப்பட்டார்.

Related Posts