ஹெல்மெட்டைத் தாக்கிய பவுன்சர் மிரண்டுபோன ஷேன் வோட்சன்

வலைப்பயிற்சியின் போது அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் பவுன்சர் ஒன்று ஷேன் வோட்சனின் ஹெல் மெட்டைத் தாக்கியதில் அவர் அதிர்ந்து போனார்.

Shane Watson walks from the nets after being hit on the helmet

இதனையடுத்து அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சனும் பயிற்சியைத் தொடராமல் வருத்தத்துடன் வெளியேறினார்.

பந்து வோட்சனை தாக்கியதும் பேட்டின்சன் உட்பட அவுஸ்திரேலிய வீரர்கள் அனைவ ரும் வோட்சனை நெருங்கி ஆதரவு அளித்தனர்.

பிறகு மருத்துவர் பீட்டர் பக்னர் வோட்சனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். பிறகு வோட்சன் ஓய் வறைக்குத் திரும்பினார்.

ஷேன் வோட் சன் குறித்து சக வீரர் பிராட் ஹேடின் கூறு கையில், வோட்சனுக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் அவர் கொஞ்சம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

பவுன்சர் பந்து தலையில் பட்டது, எனவே அனைவரையும் போல் அவருக்கும் கொஞ்சம் அச்சம் ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மற்றொரு வீரர் மிட்செல் ஸ்டார்க்கும் முழங்காலில் அடிவாங்கி பெவிலியன் சென்றதாகவும், ஆனால் அவரும் சரியாகி விட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

அணித் தெரிவாளர் மார்க்வோ கூறுகையில், வலையில் அவர் தன் கடைசி பந்தை எதிர்கொண்டார், அப்போது பவுன்சரில் நெற்றிப்பகுதியில் அடிபட்டது போல் தெரிகிறது.

கொஞ்சம் மன அமைதியின்றி இருந்தார். சில மருத்துவ சோதனைகள் அவருக்கு செய்யப்படுகின்றன. டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்றே கருதுகிறோம் என்று கூறியுள்ளார்.

Related Posts