ஜப்பானிய நகரான ஹிரோஷிமா மீது அமெரிக்க அணுகுண்டு தாக்குதல் நடத்தி இன்றுடன் 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
140, 000 உயிர்களை காவு கொண்ட இவ்வணுகுண்டு தாக்குதலுடன் முதலாம் உலக மகா யுத்தம் நிறைவுக்கு வந்ததுள்ளது. உயிரிழந்த சொந்தங்களை நினைவு கூர்ந்து ஹிரோஷிமா ஞாபகார்த்த பூங்காவுக்கருகில் கூடிய ஆயிரக்கணக்கான ஜப்பானியர்கள் இறந்தவர்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தித்தனர். அத்துடன் நினைவுச்சின்னத்துக்கருகில் ஓடும் மோடோயாஷூ ஆற்றில் விளக்குகளை மிதக்கவிட்டனர்.
ஹிரோஷிமா மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று தினங்களில் நாகசாக்கி மீது அணுகுண்டு தாக்குதலை நடத்தியது அமெரிக்கா. எனோலா கே என்று பெயரிடப்பட்ட A US B-29 யுரேனியம் குண்டு ஹிரோஷிமா நகரில் 1945ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி காலை 8.10 மணியளவில் வீசப்பட்டது.
ஹிரோஷிமாவின் 600 மீற்றர் வரை (1,800 அடிகள்) இதன் தாக்கம் பரவியமை குறிப்பிடத்தக்கது.அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு 70 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அதன் தாக்கம் இன்றும் காணப்படுகின்றமை வருந்தத்தக்க விடயம்.