இன்று காலை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஹிருனிகா பிரேமசந்திர ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
தெமட்டகொடை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டரில் ஒருவரைக் கடத்தி, தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஹிருனிகா பிரேமசந்திர இன்று காலை கைது செய்யப்பட்டார்.