சிவா இயக்கத்தில் நடித்து நடிக்கும் 57வது படம் கேங்ஸ்டர் கதையில் உருவாகிறது. இந்த படத்தில் அஜித்துடன் காஜல்அகர்வால், அக்சராஹாசன், சதீஷ் உள்பட பலர் நடிப்பதாக கூறப்படுகிறது.
சத்யஜோதி பிலிம் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பல்கேரியா நாட்டில் தொடங்குகிறது. அதையடுத்து ஐரோப்பாவிலும் படப்பிடிப்பு நடக்கிறதாம்.
மேலும், தொடர்ந்து 40 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடைபெறும் நிலையில், படக்குழுவினர் இப்போதே அங்கு செல்லத் தொடங்கி விட்டனர்.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் அஜித் பல்கேரியா செல்கிறார். மேலும், அஜித் 57-வது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பல்கேரியா நாட்டிலுள்ள nu boyana -என்ற பிரமாண்ட ஸ்டுடியோவில் தொடங்குகிறதாம்.
கிழக்கு ஐரோப்பா நாடுகளின் மிகப் பெரிய இந்த ஸ்டுடியோவில்தான் பல பிரமாண்ட ஹாலிவுட் படங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறதாம். அந்த வகையில், அஜித் படமும் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பிரமாண்ட படமாக உருவாகும் என்று தெரிகிறது.