ஹாலிவுட் படத்தில் ரஜினிகாந்த் ஜாக்கிசான்

ரஜினிகாந்த் கபாலி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம்(ஜூலை) 15-ந்தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகும் 2.0 படத்திலும் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்து விட்டதாக அந்த படத்தின் இயக்குனர் ஷங்கர் கூறி இருக்கிறார்.

Rajinikanth-Jackie-Chan

இந்த நிலையில் ஹாலிவுட் படமொன்றில் ரஜினிகாந்தையும் ஜாக்கிசானையும் இணைந்து நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை மலேசியாவில் உள்ள பத்திரிகைகள் தலைப்பு செய்தியாக வெளியிட்டு உள்ளன. கபாலியின் பெரும்பகுதி படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது. இதற்காக ரஜினிகாந்த் பல வாரங்கள் அங்கு தங்கி இருந்தார். அப்போது ஹாலிவுட் படம் குறித்து அவரிடம் பேசப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த படத்துக்கு ‘ஷினிசாஹா’ என்று பெயர் வைத்து இருப்பதாகவும் மலேசியாவை சேர்ந்த முகமது ரபிஜி முகமத்ஜின் என்பவர் அதிக பட்ஜெட்டில் இதனை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஷினி என்பது மலேசியாவில் ஓடும் பிரபல நதியின் பெயர் ஆகும். அந்த நதிக்குள் வசிக்கும் ஒரு டிராகனை பற்றிய கதையே இந்த படம். 90 சதவீதம் கிராபிக்ஸ் காட்சிகளுடன் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

மலேசியாவை சேர்ந்த பல நடிகர்கள் இதில் நடிக்க உள்ளனர். கதாநாயகியாக நடிக்க இந்தி நடிகை சோனம் கபூரிடம் பேசி இருப்பதாகவும் அவர் சம்மதம் சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா, நார்வே, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிடவும் முடிவு செய்திருப்பதாக பேசப்படுகிறது.

ஆனால் ஹாலிவுட் படத்தில் நடிப்பது குறித்து ரஜினிகாந்த் தரப்பில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் நடிப்பதாக இருந்தால், 2.0 படவேலைகளை முடித்து விட்டு ஹாலிவுட் படத்துக்கு போவார் என்று தெரிகிறது.

Related Posts