ஹாலிவுட் படத்தில் அனுஷ்கா!

ஹாலிவுட் படங்களில் நடிக்க இந்திய நடிகைகள் தேவைப்பட்டால் பெரும்பாலும் இந்தி நடிகைகளைத்தான் தேர்வு செய்வார்கள். அப்படித்தான் மல்லிகா ஷெராவத் உள்ளிட்ட சில பாலிவுட் நடிகைகள் தொடர்ந்து ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகின்றனர்.

anushka-shetty-

இந்த நிலையில், ஹாலிவுட்டில் தயாராகயிருக்கும் எக்ஸ்பென்டபிள் என்ற படத்தில் மொத்தம் ஏழு நடிகைகள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்களாம். இவர்களை ஒவ்வொரு நாடுகளில் இருந்து தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.

அப்படி இநதிய நடிகைகளில் யாரை தேர்வு செய்யலாம் என்று ஆலோசித்தவர்கள் இந்தி நடிகைகளை விடுத்து, தென்னிந்திய நடிகைகளை தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளார்களாம்.

அப்படி அவர்கள் எந்த நடிகையை ஓ.கே செய்யலாம் என்று போட்ட பட்டியலில் அனுஷ்கா, நயன்தாரா, ஸ்ரேயா, ராய் லட்சுமி என பல நடிகைகள் இடம் பிடித்தார்களாம். இறுதியாக அனுஷ்காவே அந்த கதாபாத்திரத்தை தாங்கக்கூடிய நடிகையாக இருப்பார் என்று இறுதி முடிவெடுத்திருக்கிறார்களாம்.

அருந்ததி, ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி போன்ற படங்களில் அவர் நடித்திருக்கும் அதிரடி கதாபாத்திரங்களே அவரை தேர்வு செய்ய முக்கிய காரணமாக அமைந்துள்ளதாம்.

Related Posts