Ad Widget

ஹார்வர்ட் பல்கலையில் பேச பவன் கல்யாண், மாதவனுக்கு அழைப்பு

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடக்கும் கருத்தரங்கில் பேச தென்னிந்திய நடிகர்களான பவன் கல்யாண் மற்றும் மாதவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்திய மாநாட்டில் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்துக் கொண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார். புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலையில் பேசிய முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றார் கமல்ஹாசன்.

தற்போது அவரைத் தொடர்ந்து தெலுங்கு ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் மாதவனுக்கு கருத்தரங்கில் பேச அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய மாநாட்டின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Really looking forward to having R. Madhavan @ActorMadhavan as a speaker at IndiaConference 2017 in February at Harvard University, Boston. pic.twitter.com/tcVrQsW8DH
— India Conference (@indiaconf2017) January 16, 2017

The king of @Tollywood and Jana Sena Party, @PawanKalyan will be speaking at IndiaConference2017 at Harvard. @indiaconf2017 @JanaSenaOnline pic.twitter.com/sKhgrxh1FR
— India Conference (@indiaconf2017) January 16, 2017

அமெரிக்காவில் நடைபெறும் மிகப்பெரிய மாநாட்டை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஹார்வர்ட் பொருளாதாரப் பள்ளி மற்றும் ஹார்வர்ட் கென்னடி பள்ளி இணைந்து நடத்துகிறது. வருகிற பிப்ரவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில், சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர். இதில் இந்தியா சார்பாக பவன் கல்யாண் மற்றும் மாதவன் உரையாற்ற இருக்கிறார்கள்.

Related Posts