ஹாரிஸ் ஜெயராஜை பாரட்டிய சூர்யா

என்னை அறிந்தால், இருமுகன் படங்களுக்கு பிறகு எஸ்-3, சாமி-2, குமரி கண்டம், ஏ.ஆர்.முருகதாஸ் படம் என பல படங்களுக்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இதில் தற்போது சூர்யாவின் எஸ்-3 படத்திற்கான இசைப்பணிகளில் தீவிரமடைந்திருக்கிறார். இதற்கு முன்பு சூர்யா நடித்த, காக்க காக்க, கஜினி, வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், மாற்றான் என பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ், இந்த படத்திலும் மெகா ஹிட் பாடல்களை கொடுத்து விட வேண்டும் என்று தீவிரமாக இறங்கியிருக்கிறார்.

அந்த வகையில், தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள அப்படத்தின் பாடல்களை படமாக்கும் வேலைகளில் இறங்கிவிட்டார் டைரக்டர் ஹரி. அதன் முதல் கட்டமாக சூர்யாவின் இண்ட்ரோ பாடலை தற்போது ரெக்கார்ட்டிங் செய்து முடித்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். அதோடு, சோனி சோனி சூப்பர் சோனிக் என்று தொடங்கும் அந்த பாடலின் முதல் வரியையும் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த பாடலைக்கேட்டதும் சூப்பர் என்று சொல்லி ஹாரிஸ் ஜெய ராஜை கட்டிப்பிடித்துக் கொண்டாராம் சூர்யா.

Related Posts