ஹப்புத்தளை விமான விபத்து ; காரணத்தை கண்டறிய சிறப்புக் குழு நியமனம்!

விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்று ஹப்புத்தளை பகுதியில் வீழ்ந்து நொறுங்கிய விபத்துக்குள்ளாகியமை தொடர்பில் ஆராய விமானப் படைத் தளபதியின் அறிவுத்தலின் கீழ் சிறப்பு குழு வொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படைக்கு சொந்தமான Y-12 ரகத்தைச் சேர்ந்த சிறிய விமானம் வீரவிலவிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த போது இவ்வாறு விபத்துக்குள்ளானதாக விமானப் படைப் பேச்சாளர் கெப்டன் கிஹான் செனெவிரட்ன தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்த பெண் ஒருவர் காயமடைந்து ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் இரண்டு விமானப்படை வீரர்களும் மற்றும் கண்காணிப்பாளர்கள் இருவர் இருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த விபத்தில் வீழ்ந்து நொறுங்கிய விமானம் தீப்பற்றிக் கொண்டது. தீயை அணைப்பதற்கு நடவடிக்கை எடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts