ஹன்சிகாவை கிண்டல் செய்த ஜீவா!

தென்னிந்திய ரசிகர்கள் கொஞ்சம் பப்ளியாக இருக்கும் நடிகைகளையே அதிகமாக ரசிப்பதோடு தங்களது கனவுக்கன்னியாகவும் கருதுவார்கள். அதனால்தான் குஷ்பூ போன்ற குண்டு நடிகைகளுக்கு இங்கே வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது.

jeeva-hansika

இந்த நிலையில், தனுஷின் மாப்பிள்ளை படத்தில் தமிழுக்கு வந்த ஹன்சிகாவும் கிட்டத்தட்ட ஜூனியர் குஷ்பு போன்ற உடல்வாகுடன் இருந்ததால் அவருக்கு முதல் படத்திலேயே அதிக ரசிகர்கள் உருவாகினர்.

அதோடு, விஜய்யுடன் நடித்த வேலாயுதம் படத்திற்கு பிறகு இன்னும் அதிகப்படியான ரசிகர்கள் கிடைக்க தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்றார் ஹன்சிகா.

அதேசமயம், பின்னர் சில படங்களுக்காக தனது உடல் எடையை குறைத்துக் கொண்டு நடித்தார் ஹன்சிகா. ஆனால் தற்போது ஜீவாவுடன் நடித்துள்ள போக்கிரி ராஜா படத்திற்காக ஓரளவு எடையை அதிகப்படுத்தி மீண்டும் பழைய பப்ளிமாஸ் தோற்றத்தில் நடித்துள்ளார் ஹன்சிகா.

அதோடு அவரது தோற்றத்தை வைத்து பப்ளி என்று தொடங்கும் ஒரு பாடலும் உள்ளதாம். இந்த பாடல் படமாக்கப்பட்டதில் இருந்து அந்த யூனிட்டில் இருந்த சிலர், ஹன்சிகாவை பெயரைச்சொல்லி அழைக்காமல் பப்ளிம்மா என்றுதான் அழைத்தார்களாம்.

ஆனால் ஜீவா உள்ளிட்ட சிலர் பப்ளிமாஸ் என்று அவருக்கு பெயர் வைத்து அவ்வப்போது அந்த பெயரை சொல்லியே கிண்டல் செய்தார்களாம்.

Related Posts