ஹன்சிகாவிடம் நான் கண்ட மாற்றம்!! பிரபுதேவா

தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஹன்சிகா. அதையடுத்து பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம்ரவியுடன் எங்கேயும் காதல் படத்தில் நடித்தார். தொடர்ந்து ஜெயம்ரவியுடன் ரோமியோ ஜூலியட் படத்தில் நடித்த ஹன்சிகா, இன்று திரைக்கு வரும் போகன் படத்திலும் அவருடன் நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

அப்போது பிரபுதேவா கூறும்போது, என்னைப்பார்த்த மீடியாவினர், எங்கேயும் காதல் படத்தில் பார்த்த ஹன்சிகாவுக்கும், இப்போது பார்க்கும் ஹன்சிகாவுக்குமிடையே எந்தமாதிரி வித்தியாசம் உள்ளது? என்றனர். அதற்கு, அப்போது அவர் குண்டாக இருந்தார். ஆனால் இப்போது நல்ல ஸ்லிம்மாக இருக்கிறார். முன்பை விட சிறப்பாக நடிக்கிறார். ரோமியோ ஜூலியட் படத்தில் அவரது நடிப்பைப்பார்த்து வியந்துதான், இந்த போகன் படத்திற்கு ஒப்பந்தம் செய்தோம். இந்த படத்திலும் அதைவிட சிறப்பாக நடித்துள்ளார் என்று சொன்ன பிரபுதேவா,

ஹன்சிகாவிடத்தில் இன்னொரு மாற்றமும் உள்ளது. முன்பெல்லாம் அம்மா துணையின்றி வெளியில் தலைகாட்ட மாட்டார். ஆனால் இப்போது தனியாக தைரியமாக வருகிறார். இதுதான் அவரிடம் நான் கண்ட மாற்றங்கள் என்றார் பிரபுதேவா.

Related Posts