ஹஜ் யாத்திரையின்போது நெரிசலில் சிக்கி இலங்கையர் ஒருவரும் மரணம்!

ஹஜ் யாத்திரையின்போது நெரிசலில் சிக்கி உயிரிழந்த இலங்கையரின் ஜனாஸா அடையாளம் காணப்பட்டுள்ளது. சவூதிஅரேபியாவின் மெக்காவில் ஹஜ் யாத்திரையின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில், இலங்கையர் ஒருவரின் ஜனாஸா அடையாளம் காணப்பட்டுள்ளது.

காணாமற்போயிருந்த தம்பதியினரில் கணவரின் ஜனாஸா மெக்காவிலுள்ள பிரேத அறையில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறித்து சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகம் தனக்கு உறுதிசெய்துள்ளதாக முஸ்லிம் சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் கூறினார்.

ஜனாஸாவை சவூதியில் நல்லடக்கம் செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், காணமற்போயுள்ள பெண்ணைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Posts