கண்டி, கட்டுகஸ்தோட்டை மஹியாவை பிரதேசத்தில், முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசார காரியாலயத்தின் மீது நேற்றிரவு இனந்தெரியாத சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த காரியாலயத்தின் பதாதைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் நேற்றிரவு வரை யாரையும் கைது செய்யவில்லை என பொலிஸ் ஊடகபேச்சாளர் நிலையம் தமிழ்மிரருக்கு தெரிவித்தது.
சம்பவம் தொடர்பில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையெனவும் மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் அந்த நிலையம் மேலும் குறிப்பிட்டது.