ஸ்ருதியிடம் பாடம் கற்ற கமல்

மகள் ஸ்ருதியிடம் ஆங்கிலம் பேச கற்று கொண்டேன் என்றார் கமல். சேது, சந்தானம் நடிக்கும் படம் வாலிப ராஜா. விசாகா சிங் ஹீரோயின். எச்.முரளி தயாரிக்கிறார். ரதன் இசை. சாய் கோகுல் ராம்நாத் டைரக்ஷன். இப்படத்தின் ஆடியோவை வெளியிட்டு கமல் பேசியதாவது:

kamal-suruthy

சினிமாவில் பழையதை மறந்துவிடக்கூடாது. அப்படி மறந்தால் எதிர்காலமும் ஞாபகத்திற்கு வராது.இளைஞர்களை சீனியர்கள் வாழ்த்த வேண்டும் என்ற முறையில் இப்படத்தில் பணியாற்றியவர்களை வாழ்த்துகிறேன். சினிமாவை பார்க்கும்போது வியப்பாக இருப்பதாக ஹீரோ சேது கூறினார். அந்த வியப்பு இத்தனை ஆண்டுகள் ஆகியும் எனக்கு இன்னும் மறையவில்லை. எதையும் கற்றுக்கொண்டு செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு.

இளையவர்களிடம் இருந்தும் நான் நிறைய கற்றிருக்கிறேன். தசாவதாரம் படத்திற்காக அமெரிக்கர்கள் பாணியில் ஆங்கிலம் பேச வேண்டி இருந்தது. அந்த பாணியில் பேசுவதற்கு என் மகள் ஸ்ருதியிடமிருந்து தான் நான் கற்றுக்கொண்டேன். சினிமாவிற்கு இந்தியாவில் உள்ள எந்த அரசும் இதுவரை எதுவும் செய்யவில்லை. ஆனாலும் சினிமா தொழில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு கமல் பேசினார்.

Related Posts