ஸ்ரீ ரெலோ அலுவலகத்தின் மீது தாக்குதல்

attack-attackயாழ்.மாவட்ட ஸ்ரீ ரெலோ அலுவலகத்தின் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனந்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்குக்கும் மேற்பட்டவர்களே இத்தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீ ரெலோ அமைப்பின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் சோசூரியர் செந்தூரன் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

Related Posts