ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவடைந்தது! கட்சிக்கு 2தலைவர்கள் நியமனம்!

இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கட்சியின் தலைவர் பதவியில் இரு வேறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 
கட்சியின் புதிய தலைவராக மைத்திரிபால சிறிசேனவை நியமித்துள்ளதாக கட்சியின் ஒரு தெர்குதி உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.எனினும், கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றமில்லை என கட்சியின் பொதுச் செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.

 
கட்சியின் மொத்த செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு 42 செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவு காணப்படுவதாகவும் இதன்படி ஜனாதிபதி மஹிந்தவே கட்சியின் தலைவராக நீடிப்பார் எனவும் அனுரபிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.
எனினும், கட்சியின் புதிய தலைவராக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மை பலம் எமக்கே உண்டு என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் அதன் பிரான கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் பெரும்பான்மை ஆதரவு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கே உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு 10 டார்லி வீதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.கட்சியின் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இதில் எவ்வித மாற்றமும் கிடையாது எனவும் அவர் தெரிவித்தள்ளார்.மக்களும் அதனையே விரும்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயங்கள் குறித்து பூரணமாக தெளிவுபடுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.ஒரு சில உறுப்பினர்கள் விலகிச் சென்ற போதிலும், கட்சியின் ஆதரவு மஹிந்த ராஜபக்ஸவிற்கே உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டும் ஜனாதிபதிக்கு கட்சியின் தலைமைப் பதவி கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என முன்னாள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, கட்சிக்கு எதிராக போட்டியிட்ட ஒருவரை எவ்வாறு கட்சியின் தலைமைப் பதவிக்கு நியமிப்பது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்குத் தளபதியும், முன்னாள் புனர்வாழ்வு பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா ) புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தெரிவு செய்வதில் ஆட்சேபம் கிடையாது என  தெரிவித்துள்ளார்.அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தலாதா மாளிகை மீது குண்டுத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் கருணாவிற்கு தொடர்பு இருப்பதாகவும் கருணாவை தண்டிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் காலத்தில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தரப்பினர் கருத்து வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

தன்னைக்கைது செய்யப்படுவதில் இருந்து தவிர்த்துக்கொள்வதற்காக இந்த முடிவை இவர் எடுத்திருக்கக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.இதை எவ்வாறு அரசு கையாளப்போகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Posts