ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் புரட்சிப்பாடல்கள்!

யாழில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் தமிழீழ புரட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டன.

யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.

அந்நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட புரட்சி பாடல்கள் ஒலிக்க விடப்பட்டன.

இதேவேளை, புத்தாண்டு வாழ்த்துக்களை விடுதலைப்புலிகள் அமைப்பின் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் உருவப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த இரு இளைஞர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இத்துடன், அவர்கள் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts