ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு எதிராக முறைப்பாடு; ஆறு வருடங்களாக நிதி மோசடி

ஸ்ரீலங்கா கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (cope) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துநெதி இந்த முறைப்பாட்டினை செய்துள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றிற்கு பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வந்துள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதி மோசடியுடன், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள் செயலாளர் நிசாந்த ரணதுங்க, முன்னாள் இடைக்கால குழு உறுப்பினர்களான, டி.எஸ் டி சில்வா, சுஜீவ ராஜபக்ச, கலிங்க இந்தாதிஸ்ஸ, அசந்த செனவிரத்ன மற்றும் பிரபாத் செனவீரத்ன ஆகியோர் தொடர்புபட்டுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளமை கோப் குழுவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Posts