ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் விபத்து!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்று இந்தியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பில் இருந்து இந்தியாவின் கொச்சின் நோக்கிப் புறப்பட்ட யூஎல் 167 என்ற விமானமே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானம் தரையிறங்கிய போது, கொச்சின் விமான தளத்தினை அண்டிய பகுதியில் நிலவிய காலநிலை காரணமாக விமானம் வழுக்கிச் சென்று அருகில் இருந்த மின்கம்பங்களில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்படும் போது, அந்த விமானத்தினுள் 228 பயணிகளும் 12 பணியாளர்களும் இருந்துள்ள போதும், அதிஷ்டவசமாக விபத்தின் போது ஒருவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.

Related Posts