ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இனி அமெரிக்கா வசம்?

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை அமெரிக்காவின் ரி.பி.ஜி. விமான நிறுவனத்துக்கு விற்பனை செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த தகவலை பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரத்ன நேற்று தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

கடந்த 1992ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை தனியார் மயப்படுத்த முயற்சிக்கும் போதும் இந்த அமெரிக்க நிறுவனம் தனக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும், அப்போதிருந்த அரசாங்கம் இதனை எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

ரி.பி.ஜி. விமான நிறுவனத்துக்கும் பர்பேச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்துக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை. ரி.பி.ஜி. விமான நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம் எனவும் பிரதியமைச்சர் கூறினார்.

இந்த நிறுவன விற்பனை தொடர்பில் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால், ரி.பி.ஜி. நிறுவனத்துக்கு அடுத்த மாதமளவில் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் மேலும் கூறினார்.

Related Posts