ஸ்ரீதிவ்யாவுக்கு நம்பிக்கை கொடுத்த மருது!

சிவகார்த்திகேயனுடன் ஸ்ரீதிவ்யா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் சூப்பர் ஹிட்டானதால் அடுத்தடுத்து அவர் பல படங்களில் கமிட்டானார். ஆனால் பின்னர் வெளியான சில படங்கள் வெற்றி பெற்றபோதும் பரபரப்பாக ஓடவில்லை. அதனால் எதிர்பார்த்தபடி ஸ்ரீதிவ்யாவுக்கு மேல்தட்டு ஹீரோக்களின் படங்கள் புக்காகவில்லை. அதோடு, மலையாள ரீமேக் படமான பெங்களூர் நாட்கள் படமும் அவரை ஏமாற்றிவிட்டது.

sri-thivya

இந்த நிலையில், கொம்பன் டைரக்டர் முத்தையா இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மருது படத்தின் மீது பெரிய நம்பிக்கை வைத்துள்ளார் ஸ்ரீதிவ்யா. இந்த படத்தில் கிராமத்து பெண்களின் வெட்கம், கூச்சம், பாசம், காதல் என அனைத்து விதமான உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தி நடித்துள்ளாராம் அவர்.

அந்த அளவுக்கு நல்ல கதாபாத்திரமும் அமைந்திருக்கிறதாம். அதனால், எப்படி சிவகார்த்திகேயனுடன் நடித்த கிராமத்து படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் தனக்கு ஹிட்டாக அமைந்ததோ அதேபோல் இந்த மருது படமும் வெற்றிப்படமாக அமையும் என்று தான் நம்புவதாக கூறுகிறார் ஸ்ரீதிவ்யா.

Related Posts