ஸ்மோக்கிங் ! டிரிங்கிங் 2 கிங்களை மறந்தால் நாம் தான் கிங்! தாமு

ஈரோட்டில் நடந்த கட்டிட பொருள் கண்காட்சியில் நடிகர் தாமுவின் பலகுரல் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் நடிகர் தாமு பேசியதாவது:–

நான் இதுவரை 107 படங்களில் நடித்து உள்ளேன். கடந்த 4 வருடமாக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி வைத்து பலகுரல் நிகழ்ச்சி நடத்தி வருகிறேன். இதுவரை 9 ஆயிரத்து 78 நிகழ்ச்சி நடத்தி உள்ளேன். கடவுளை நாம் கோவிலில் போய் கும்பிடுகிறோம். ஆனால் வீட்டில் இருக்கிற கடவுள் நமது அம்மா– அப்பா தான். அம்மா , அப்பாவை மதிக்க வேண்டும். அவர்கள் தான் நமது முதல் தெய்வங்கள். நம் உடலை நாம் தான் ஒழுங்காக வைத்துக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் 2 ‘கிங்’களை நாம் கைவிட்டால் அப்புறம் நாம் தான் கிங். அப்படி என்ன 2 ‘கிங்’என்று கேட்கிறீர்களா? அதாங்க ‘‘டிரிங்கிங்’’. ‘‘ஸ்மோக்கிங்’’. இந்த 2 கிங்கையும் விட்டு விட்டால் நாம் தான் கிங். என் அம்மாவுக்கு சொந்த ஊரு ஈரோடு வளையல்கார வீதி தான். அதனால் நானும் ஈரோடு காரன் என்று சொல்லி கொள்வதில் பெருமைபடுகிறேன்.

Related Posts