ஸ்டைலிசாக மாறும் விஜய்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61-வது படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையிலுள்ள பின்னி மில்லில் போடப்பட்டுள்ள செட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

இதில் தாடி வைத்த நடுத்தர வயது கெட்டப்பில் விஜய் நடித்து வருகிறார். இந்த வேடத்துக்காக ஏற்கனவே தான் இருந்ததைவிட ஓரளவு வெயிட் போட்டுள்ளார் விஜய்.

ஆனால் இதன்பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் 40 நாட்கள் நடைபெற உள்ளது. அங்குதான் இளவட்ட விஜய்கள் நடிக்கும் ரொமான்ஸ் மற்றும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

மேலும், இளவட்ட கெட்டப்பு களுக்காக தனது வெயிட்டை குறைக்கும் விஜய், பத்து வருடங்களுக்கு முன்பு தான் இருந்தது போன்று மாறப்போகிறாராம்.

அதோடு, அவரது ஹேர்ஸ்டைலும் மாறுகிறதாம். அதனால் இந்த படத்தில் விஜய்யை மிகவும் ஸ்டைலிசாக பார்க்கலாம் என்கிறார்கள்.

Related Posts