Ad Widget

ஸ்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தைப் பிரியாது

ஸ்காட்லாந்து ஐக்கிய இராஜ்ஜியத்துடன் இணைந்திருக்கும் என நடந்து முடிந்த பொது வாக்கெடுப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

scotland

நேற்று வியாழக்கிழமை ஸ்காட்லாந்து முழுவதும் நடந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்குப்பதிவில் சுமார் 80 சதவீதத்துக்கு மேலானோர் வாக்களித்துள்ளனர்.

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை ஒருங்கிணைந்து பிரித்தானியா என்று அழைக்கப்படுகிறது. ஸ்காட்லாந்தில் தனி பாராளுமன்றம் இருந்தாலும் குறிப்பிட்ட அதிகாரமே அதற்கு உள்ளது.

மற்றவை அனைத்தும் இங்கிலாந்தின் கீழ் இருந்து வருகிறது. ஆகவே, பிரித்தானியாவிடம் இருந்து ஸ்காட்லாந்து பிரிய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts