ஷூட்டிங் இல்லைனா எடிட்டிங்!! கமல்

தமிழ்சினிமாவில் எப்போதும் பரபரப்பாக இயங்கி வந்தவர் கமல்தான். யாருடைய கண் பட்டதோ… அவருக்கு திடீரென விபத்து ஏற்பட்டது. அதன் காரணமாக கமலின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்ட கமலை, குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஓய்விலிருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இதனால் கடந்த சில வாரங்களாக ஓய்வில் இருந்து வந்தார் கமல்.

kamal-sabash-naidu

ஏறக்குறைய ஒரு மாதத்துக்குப் பிறகு ஆகஸ்ட் முதல் வாரத்தில் இரண்டு பேரின் உதவியுடன் எழுந்து நடக்கத் துவங்கினார். தற்போது சிறிய அளவிலான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ளும் அளவுக்கு கடந்த ஒரு வார காலமாக முன்னேற்றம் கண்டு வருகிறார் கமல்.

தன் உடல்நிலை வேகமாக தேறி வருவதால், ‘சபாஷ் நாயுடு’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை செப்டம்பர் 2ஆவது வாரத்தில் ஆரம்பிக்க முனைப்பாக இருக்கிறாராம் கமல். இப்படத்தின் முதல் ஷெட்யூலை அமெரிக்காவில் முடித்துவிட்டுத் திரும்பியநிலையில் விபத்தை சந்தித்தாலும் ஓய்வில் இருந்தபோது கமல் சும்மா இல்லை. ‘சபாஷ் நாயுடு’ படத்தின் 40 நிமிட காட்சிகளுக்கான எடிட்டிங்கையும் முடித்துவிட்டாராம். அடுத்தகட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் துவங்குகிறது.

Related Posts