ஷரபோவாவுக்கு சச்சினைத் தெரியாதாமே…!!!

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை யார் என்றே தெரியாது என ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தெரிவித்துள்ளார்.

-maria-sharapova

கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனைகளை முறியடிக்க ஒருவர் பிறந்து தான் வர வேண்டும். ஏன் கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்கள் அவரை கொண்டாடுகின்றனர். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் யார் என்றே தெரியாது என்று ரஷ்ய டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை நடத்த போட்டியை சச்சின் டெண்டுல்கர் மற்றும் இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காம் ஆகியோர் ராயல் பாக்ஸில் அமர்ந்து கண்டுகளித்தனர்.

ராயல் பாக்ஸில் யார் எல்லாம் இருந்தார்கள் என்று ஷரபோவாவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அங்கிருந்த பெக்காம் உள்ளிட்டவர்களின் பெயர்களை கூறினார். ஆனால் பெக்காம் அருகில் அமர்ந்திருந்த சச்சின் பெயரை மட்டும் அவர் கூறவில்லை.

சச்சின் டெண்டுல்கரை உங்களுக்கு யார் என்று தெரியாதா என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்க, எனக்கு அவர் யார் என்று தெரியாது என ஷரபோவா பதில் அளித்தார்.

பெக்காமை நான் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லண்டனில் சந்தித்துள்ளேன். அவர் ஒரு சிறந்த நபர். நாங்கள் நெருங்கிய நண்பர்கள் எல்லாம் கிடையாது. ஆனால் ஹலோ கூறி ஒருவரையொருவர் பாராட்டுவது நல்ல விஷயம் தானே என்றார் ஷரபோவா.

சச்சின் டெண்டுல்கர் யார் என்று உலக ரசிகர்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கையில் ஷரபோவாவோ சாதனை நாயகனை யார் என்று கேட்டுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Related Posts