ஷரபோவாக்கு சச்சின் யார் என காட்டிய யுவராஜ்!

சச்சின் டெண்டுல்கர் யார் என்று கேட்டு சர்ச்சைக்குள்ளானார் மரியா ஷரபோவா. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் சச்சின் தங்களுக்கு யார் என்பதை காட்டியுள்ளார் இந்திய வீரர் யுவராஜ் சிங்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த எம்சிசி மற்றும் ரெஸ்ட் ஆப் தி வேர்ல்ட் அணிகளுக்கு இடையிலான காட்சிப் போட்டியின்போது சச்சின் காலைத் தொட்டு வணங்கி சலசலப்பை ஏற்படுத்தினார் யுவராஜ்.

sachthin-yuvaraj

இந்தப் போட்டியின்போது ரெஸ்ட் ஆப் வேர்ல்ட் அணியில் இடம் பெற்றிருந்த யுவராஜ் சிங், எம்சிசி அணியின் கேப்டன் சச்சின், பீல்டிங்கில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஓடிச் சென்று சச்சின் காலைத் தொட்டு வணங்கினார். இதனால் கூச்சப்பட்டுப் போனார் சச்சின்.

இப்போட்டியில் யுவராஜ் சிங் சிறப்பாக ஆடினார். 134 பந்துகளைச் சந்தித்த அவர் 132 ரன்களைக் குவித்தார்.

தனது பேட்டிங்கின்போது திடீரென சச்சினை நோக்கிச் சென்ற யுவராஜ், அவரது காலைத் தொட்டு வணங்கினார். இதைப் பார்த்து சச்சின் கூச்சப்பட்டுப் போனார். யுவராஜை தனது கையால் முதுகில் கை வைத்து தூக்கி விலக்கி விட்டார்.

41வது ஓவர் முடிந்தபோது இந்த கும்பிடு போடு வைபவம் நடந்தது.

யுவராஜின் செய்கையால் லார்ஸ்ட் மைதானமே கலகலப்பாகிப் போனது. ரசிகர்கள் இந்தக் காட்சியைப் பார்த்து தொடர்ந்து சில விநாடிகளுக்கு கைதட்டி வரவேற்றனர்.

சச்சினை ஒருமுறை தனது தாத்தா போன்றவர் என்று கூறியிருந்தார் யுவராஜ். அதேபோல கடவுள் என்றும் அழைத்துள்ளார். தனது குரு என்றும் கூறி வருபவர் யுவராஜ் என்பது நினைவிருக்கலாம்.

சச்சினும் யுவராஜுக்கு தொடர்ந்து தார்மீக ஆதரவைத் தந்து வருகிறார். சமீபத்தில் கூட 2015 உலகக் கோப்பைப் போட்டியின்போது யுவராஜ் சிங் முக்கிய வீரராக ஜொலிப்பார் என்று கூறியிருந்தார்.

அத்தனை பேர் மத்தியில், உலகப் புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் திடீரென சச்சின் காலைத் தொட்டு யுவராஜ் வணங்கியது ஏன் என்று தெரியவில்லை. ஒரு வேளை சச்சின் யார் என்று கேட்ட மரியா ஷரபோவாவுக்கு இப்படி மறைமுகமாக யுவராஜ் பதில் கொடுத்தாரா என்றும் தெரியவில்லை.

எம்.சி.சி அணிக்கும் உலக அணிக்கும் இடையிலான இந்த போட்டியில் எம் சி சி அணி வெற்றிப்பெற்றது.

எம்.சி.சி அணிக்கு சச்சின் டெண்டுல்கரும் உலக அணிக்கு ஷேன் வோர்னும் தலைமை தாங்கினர்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய உலக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 293 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் யுவ்ராஜ் சிங் 132 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எம் சி சி அணி 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது.

இதன்போது துடுப்பாட்டத்தில் எரோன் பின்ஞ் ஆட்டமிழக்காது 181 ஓட்டங்களை பெற்றார்.

தொடர்புடைய செய்தி

லோர்ட்சில் இடம்பெறும் ​​நட்சத்திர கண்காட்சி கிரிக்கெட் போட்டி

Related Posts