தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி கொண்டவர் நடிகர் சத்யராஜ்.வில்லனாக அறிமுகமாகி அசத்தியவர் ஹுரோவாகவும் பட்டைய கிளப்பினார்.இவர் தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்பு எஸ்.ஜே சூர்யாவின் இசை படத்தில் மீண்டும் வில்லனாக நடித்துள்ளார்.
இது குறித்து சத்யராஜ் கூறுகையில், நான் 75 படங்களில் வில்லனாகவும், 125 படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளேன் கடந்த 1994-ம் வருடம் வெளிவந்த ‘அமைதிப்படை’ படத்தில், கடைசியாக வில்லனாக நடித்ததற்கு பிறகு சில வருடங்களுக்கு முன்பு ‘சிவாஜி’, ’எந்திரன்’ படத்தில் வில்லனாக நடிப்பதற்கு அழைப்பு வந்தது.
அந்த படத்திலும் நடிக்க மறுத்து விட்டேன். வெங்கட்பிரபு டைரக்ஷனில் உருவாகி வரும் ‘மாஸ்’ படத்திலும், சாஹித்கபூர் கதாநாயகனாக நடிக்க, பிரபுதேவா இயக்கும் இந்தி படத்திலும் வில்லனாக நடிக்கும்படி கேட்டார்கள். மறுத்து விட்டேன்.
20 வருடங்களுக்குப்பின், எஸ்.ஜே.சூர்யா இயக்கும் ‘இசை’ படத்தில் வில்லனாக நடிக்கிறேன். ‘சிவாஜி’ படத்துக்காக எனக்கு பேசப்பட்ட சம்பளத்தில், பத்தில் ஒரு பங்கு சம்பளம் வாங்கிக்கொண்டு இந்த படத்தில் நடித்து இருக்கிறேன். சம்பளமே கொடுக்காவிட்டால்கூட, ‘இசை’ படத்தில் நடித்து இருப்பேன். அப்படி ஒரு கதையம்சமும், கதாபாத்திரமும் உள்ள படம் அது.
உலகிலேயே எந்த நடிகரும் நடித்திராத ஒரு வில்லன் கதாபாத்திரத்தில், நான் நடித்து இருக்கிறேன் என்றும் அதற்காக பெருமைப்படுகிறேன் எனவும் கூறியுள்ளார்.